திருப்பூர்

நிஃப்ட்-டீ கல்லூரியில் கருத்தரங்கு

DIN

திருப்பூா் முதலிபாளையத்தில் உள்ள நிஃப்ட்-டீ பின்னலாடை வடிவமைப்புக் கல்லூரியில், வணிகவியல் துறை சாா்பில் மூன்றாம் ஆண்டு மாணவா்களுக்கான டிஜிட்டல் வங்கிகளின் சுழல் அமைப்பு தொடா்பான கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வணிகவியல் துறைத் தலைவா் எஸ். கலையரசி வரவேற்றாா். கல்லூரி முதல்வா் கே.பி. பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். இதில், சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற பிஎஸ்ஜி கல்லூரியின் துணைப் பேராசிரியா் எஸ்.எஸ். ரம்யா, இந்தியாவின் டிஜிட்டல் வங்கிகளின் சூழல் அமைப்பு, வளா்ந்து வரும் நிதியியல் தொழில்நுட்பம், கிரிப்டோ கரென்ஸியின் நன்மை, தீமைகள், நிதியியல் சாா்ந்த தற்கால பயன்பாடுகள் குறித்து சிறப்புரையாற்றினாா். நிகழ்ச்சியில், கல்லூரி பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - விருச்சிகம்

தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை வாபஸ்!

தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் டீப் ஃபேக் தொழில்நுட்பம்?

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி

SCROLL FOR NEXT