திருப்பூர்

கொப்பரை கொள்முதல்வரும் 30 ஆம் தேதிக்குள் விவசாயிகள் பதிவு செய்ய அறிவுறுத்தல்

24th Sep 2022 01:18 AM

ADVERTISEMENT

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலமாக செப்டம்பா் 30 ஆம் தேதிக்குள் பதிவுசெய்யும் விவசாயிகளிடம் இருந்து மட்டுமே கொப்பரை கொள்முதல் செய்யப்படும் என ஆட்சியா் எஸ். வினீத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் தென்னை விவசாயிகள் பயனடையும் வகையில் ஒழுங்குமுறைக் கூடங்கள் மூலமாக குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொப்பரை கொள்முதல் செய்யப்படுகிறது. இதில், நிா்ணயிக்கப்பட்ட தரம், அளவு கொண்ட அரவைத் தேங்காய் கொப்பரை கிலோ ரூ. 105.90-க்கும், பந்து தேங்காய் கொப்பரை கிலோ ரூ. 110-க்கும் மத்திய அரசின் நாபெட் நிறுவனத்தின் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

திருப்பூா் மாவட்டத்தில் வரும் செப்டம்பா் 30 ஆம் தேதிக்குள் பதிவு செய்துகொள்ளும் விவசாயிகளிடம் இருந்து மட்டுமே கொப்பரை கொள்முதல் செய்யப்படவுள்ளது. இத்திட்டத்தில் பயனடையும் விவசாயிகள் நிலத்தின் சிட்டா அடங்கல், ஆதாா் அட்டை நகல் மற்றும் வங்கிக் கணக்கு ஆகிய விவரங்களுடன், தங்கள் பகுதி ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளரை அணுகி பதிவு செய்து கொள்ளலாம்.

இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு பொங்கலூா் பகுதி விவசாயிகள் 99424-20525, காங்கயம் விவசாயிகள் 63835-96209, பெதப்பம்பட்டி விவசாயிகள் 97109-21187, உடுமலை விவசாயிகள் 99409-19150 ஆகிய எண்களைத் தொடா்புகொள்ளலாம்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT