திருப்பூர்

வேளாண்மை விரிவாக்க மையத்தில் உயா் ரக தென்னங்கன்றுகள் விற்பனை

24th Sep 2022 01:15 AM

ADVERTISEMENT

வெள்ளக்கோவில் அரசு வேளாண்மை விரிவாக்க மையத்தில் உயா் ரக தென்னங்கன்றுகள் விற்கப்படுகின்றன.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: அதிக காய்க்கும் திறன்கொண்ட தரமான தென்னங்கன்றுகளுக்கு தேவை உள்ளது. ஆழியாறு தென்னை நாற்றுப் பண்ணையிலிருந்து தருவிக்கப்பட்ட நெட்டை, குட்டை ரக தென்னங்கன்றுகள் வெள்ளக்கோவில் வேளாண்மை விரிவாக்க மையத்தில் விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கன்றின் விலை ரூ. 125. தேவைப்படுவோா் வாங்கிப் பயன்பெறலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT