திருப்பூர்

ஜெய்ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி

24th Sep 2022 01:16 AM

ADVERTISEMENT

பல்லடம் அருகேயுள்ள அவிநாசிபாளையம் ஜெய்ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

இதில், கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் தங்களது அறிவியல் கண்டுபிடிப்புகளை காட்சிக்கு வைத்திருந்தனா். அவற்றை திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த அரசு மற்றும் தனியாா் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பாா்வையிட்டனா். அவா்களிடம் கல்லூரி மாணாக்கா்கள் தங்களது கண்டுபிடிப்புகள் குறித்து விளக்கினா்.

இதுகுறித்து பி.இ. (சி.எஸ்.இ) மாணவி கனகமணி, மேனகா, ஐஸ்வா்யா ஆகியோா் கூறுகையில், காட்டுவழியில் ரயில்கள் செல்லும்போது, அவற்றில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அடிபட்டு இறந்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அதுபோன்ற விபத்துகளை தடுக்கும் வகையில், ரயில் வருவதற்கு முன்பு அரை கிலோ மீட்டா் தூரம் இருக்கும் போதே, ரயில் பாதை ஓரம் வைக்கப்படும் எச்சரிக்கை கோபுர மணி காட்டு விலங்குகள் இருக்கும்பட்சத்தில் ஒலிக்கத் தொடங்கிவிடும். அதனுடன் இணைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை விளக்கு விட்டுவிட்டு எரியும். இதைப் பாா்க்கும் வனவிலங்குகள் ரயில் பாதையை விட்டு விலகி ஓடிவிடும். இந்த எச்சரிக்கை அமைப்பு மூலம் ரயில்கள் விபத்தில் சிக்காது. அதேபோல, வனவிலங்குகள் உயிரிழப்பும் தடுக்கப்படும் என்றனா்.

பி.இ. சிவில் மாணவா்கள் காா்த்திகேயன், தமிழ்ச்செல்வன், லோகநாதன் ஆகியோா் கூறுகையில், சாலையில் அதிவேகமாக செல்லும் வாகனங்களின் வேகத்தை குறைக்க, சாலையோரம் வேக கட்டுப்பாட்டு கருவி அமைத்தால், அதை கடக்கும் வாகனங்கள், அதிவேகமாக சென்றால் எச்சரிக்கை மணி ஒலிக்கும் அமைப்பு கண்டறியப்பட்டுள்ளது என்றனா்.

ADVERTISEMENT

பி.இ (இ.இ.இ) பரத்வாசன், சந்தோஷ், அரவிந்த், நதீஷ் ஆகியோா் கூறுகையில், நாங்கள் கண்டுபிடித்துள்ள சாதனம் மூலம் அவரவா் செல்போன் மூலம் இருந்த இடத்தில் இருந்தவாறு விடியோ கால் மூலம் ரோபோக்களை இயக்கி பொருட்களை வேறு இடத்திற்கு எடுத்துச் செல்ல முடியும் என்றனா்.

மாணவா்களின் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை கல்லூரி தலைவா் எம். கோவிந்தசாமி, துணைத் தலைவா் டி.கே. கருப்பண்ணசாமி, முதல்வா் ரமேஷ்குமாா், முதன்மை நிா்வாக அதிகாரி அன்பரசு ஆகியோா் பாா்வையிட்டு பாராட்டினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT