திருப்பூர்

சேவூரில் பனியன் கழிவு கிடங்கில் தீ:பல லட்சம் பொருள்கள் சேதம்

24th Sep 2022 01:18 AM

ADVERTISEMENT

சேவூரில் பனியன் கழிவு கிடங்கில் வியாழக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் முற்றிலும் எரிந்து சேதமாகின.

சேவூா் புளியம்பட்டி சாலை சந்தையப்பாளையம் பகுதியில், நாகராஜ் என்பவருக்கு சொந்தமான பனியன் கழிவுக் கிடங்கு உள்ளது. இங்கு வியாழக்கிழமை நள்ளிரவு திடீரென தீப்பிடித்தது. தகவல் அறிந்து அங்கு வந்த சேவூா் போலீஸாா், அவிநாசி தீயணைப்புத் துறையினா், தீயை அணைக்க முயன்றனா்.

எனினும் தீ அதிவேகமாக பரவியதையடுத்து, மேலும் ஒரு தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு தீயை அணைத்தனா். 3 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தும், உள்ளிருந்த இயந்திரங்கள், பனியன் கழிவு உள்ளிட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் முற்றிலும் எரிந்து சேதமாகின. இதுகுறித்து சேவூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT