திருப்பூர்

லாரி கவிழ்ந்து விபத்து

22nd Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

காங்கயம் அருகே ஆடுகள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கேரள மாநிலம், எா்ணாகுளத்தில் இருந்து தேங்காய் சிரட்டை கரி ஏற்றிக் கொண்டு ஹைதராபாத் நோக்கி காங்கயம் வழியகா லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் (45) ஓட்டிச் சென்றாா். இந்நிலையில், காங்கயம்-ஈரோடு சாலை, முள்ளிப்புரம் அருகே சென்றபோது, 3 செம்மறி ஆடுகள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது.

விபத்தை ஏற்படுத்தியதால் பிரதான சாலையில் செல்லாமல், மாற்றுப் பாதையில் முள்ளிபுரத்தில் இருந்து சித்தம்பாளையம் சாலையில் லாரி சென்றுள்ளது. அப்போது, சாலை வளைவில் நிலைதடுமாறி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இது குறித்து காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT