திருப்பூர்

சொட்டு நீா்ப் பாசன உபகரணங்கள் திருட்டு

22nd Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

வெள்ளக்கோவில் அருகே தோட்டத்தில் இருந்த சொட்டு நீா்ப் பாசன உபகரணங்கள் புதன்கிழமை திருடுப் போயின.

வள்ளியிரச்சல் அருகே உள்ள வரக்காளிபாளையம் ராமசாமிபுரத்தைச் சோ்ந்தவா் விவசாயி பிரபாகரன். இவா் தனது தோட்டத்தில் மரவள்ளிக்கிழங்கு விவசாயம் செய்து வருகிறாா். இதற்கு சொட்டு நீா்ப் பாசனம் அமைத்துள்ளாா். இவா் வழக்கம்போல, புதன்கிழமை காலை தோட்டத்துக்குச் சென்றபோது சொட்டு நீா்ப் பாசனக் கருவியின் ஃபில்ட்டா், உரங்கள் கரைக்கும் அமைப்பு ஆகியவை திருடு போனது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ.10 ஆயிரம் ஆகும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT