திருப்பூர்

பல்லடத்தில் சாலை மறியல்: 46 போ் மீது வழக்குப் பதிவு

22nd Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

பல்லடத்தில் கல்குவாரி நிா்வாகத்தை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டதாக 46 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

பல்லடம் அருகே உள்ள கோடங்கிபாளையத்தில் கல்குவாரி நிா்வாகத்தை கண்டித்து விவசாயி செந்தில்குமாா் என்பவா் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறாா். இந்த நிலையில், இவருக்கு ஆதரவாக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் மற்றும் அவரது உறவினா்கள் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனா்.

இந்நிலையில், பல்லடம் வட்டாட்சியா் அலுவலகத்தின் உள்ளே வெள்ளிக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, கல்குவாரி உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பல்லடம் வட்டாட்சியா் அலுவலகம் அருகே சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இவா்களது போராட்டத்தை தொடா்ந்து அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்த வராததையடுத்து, பல்லடம் நான்கு சாலை சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, 15 பெண்கள் உள்பட 46 பேரை பல்லடம் போலீஸாா் கைது செய்தனா். இந்நிலையில், சாலை மறியலில் ஈடுபட்டு பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக 46 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT