திருப்பூர்

தாராபுரம் தாலுகாவில் 1,827 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

22nd Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

தாராபுரம், மூலனூா், குண்டடம் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 1,827 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

தாராபுரம் புனித அலோசியஸ் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினா்.

இதில் தாராபுரம் புனித அலோசியஸ் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 463 மாணவிகளுக்கும், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 130 மாணவா்களுக்கும், என்.சி.பி. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 110 மாணவா்களுக்கும், சி.எஸ்.ஐ. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 111 மாணவா்களுக்கும், சி.எஸ்.ஐ.பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 105 மாணவிகளுக்கும், அலங்கியம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 72 மாணவ, மாணவிகள் என தாராபுரம் தாலுகாவுக்கு உள்பட்ட அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 1,827 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியா் குமரேசன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் எம்.வாசுகி, தாராபுரம் நகா்மன்றத் தலைவா் பாப்பு கண்ணன், தாராபுரம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் செந்தில்குமாா், திருப்பூா் மாநகராட்சி 4ஆம் மண்டலத் தலைவா் இல.பத்மநாபன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT