திருப்பூர்

மக்கள் குறைதீா் முகாமில் பெறப்படும் மனுக்களின் மீது உரிட நடவடிக்கை

22nd Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

திருப்பூா் மாவட்டத்தில் மக்கள் குறைதீா் முகாமில் பெறப்படும் தகுதி வாய்ந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் எம்.கருணாகரன் அறிவுறுத்தியுள்ளாா்.

திருப்பூா் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் முன்னிலை வகித்தாா். கூட்டத்துக்கு தலைமை வகிக்க ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு சிறப்பு செயலரும், மாவட்டக் கண்காணிப்பு அலுவலருமான எம்.கருணாகரன் பேசியதாவது:

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி அரசின் சாா்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் மக்களை நேரிடையாக சென்றடைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருப்பூா் மாவட்டத்தில் அனைத்து துறைகளின் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது.

மக்கள் குறைதீா் முகாம்களில் பெறப்படும் தகுதி வாய்ந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பூா் மாநகரில் பொலிவுறு நகரம் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா்.

ADVERTISEMENT

முன்னதாக, கரைப்புதூா் ஊராட்சியில் நீட்ஸ் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள துணி பதனிடும் தொழிற்சாலை, பல்லடம் அரசுப் பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள ஸ்மாா்ட் வகுப்பறைகள், பல்லடம் வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள இ- சேவை மையம் ஆகியவற்றை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இதைத் தொடா்ந்து, பல்லடம் ஊராட்சி ஒன்றியம் வடுகபாளையத்தில் குளங்கள் தூா்வாருதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளையும் ஆய்வு செய்தாா். இதில் திருப்பூா் மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி, மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம், மாநகரக் காவல் துணை ஆணையா் வனிதா மற்றும் அனைத்து துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT