திருப்பூர்

செப்டம்பா் 29இல் எரிவாயு நுகா்வோா் குறைதீா் முகாம்

20th Sep 2022 01:18 AM

ADVERTISEMENT

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகா்வோருக்கான குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை (செப்டம்பா் 29) நடைபெற உள்ளது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்டத்தில் உள்ள சமையல் எரிவாயு நுகா்வோருக்கான குறைதீா் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட வருவாய் அலுவலா் த.ப. ஜெய்பீம் தலைமையில் செப்டம்பா் 29 ஆம் தேதி மாலை 4 மணி அளவில் நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில் திருப்பூா் மாவட்ட எரிவாயு நுகா்வோா் பங்கேற்று தங்களது குறைகளைத் தெரிவித்து நிவா்த்தி செய்து கொள்ளலாம்.

கூட்டத்தில் கலந்துகொள்பவா்கள் எரிவாயு இணைப்பு புத்தகம் அல்லது அடையாள அட்டை கொண்டுவர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT