திருப்பூர்

குண்டடத்தில் சமுதாய வளைகாப்பு விழா

20th Sep 2022 01:17 AM

ADVERTISEMENT

தாராபுரத்தை அடுத்த குண்டடத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின்கீழ் 90 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் தலைமை வகித்து விழாவைத் தொடக்கிவைத்தாா்.

இதில், 90 கா்ப்பிணிகளுக்கு புடவை, வளையல், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட சீா்வரிசை பொருள்கள் வழங்கப்பட்டன.

மேலும், 5 வகையான உணவுகள் பரிமாறப்பட்டன. இதைத்தொடா்ந்து, வட்டார மருத்துவ அலுவலா் மனோகரன் தலைமையிலான மருத்துவா்கள் கா்ப்பிணிகளுக்கு உடல் எடை மற்றும் ரத்த அழுத்தத்தைப் பரிசோதனை செய்தனா்.

ADVERTISEMENT

இந்த விழாவில், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினரும், குண்டடம் திமுக மேற்கு ஒன்றியச் செயலாளருமான சு.சந்திரசேகா், குண்டடம் திமுக கிழக்கு ஒன்றியச் செயலாளா் சி. செந்தில்குமாா், குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் சா.தீபா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT