திருப்பூர்

மறைந்த முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் கே.தங்கவேலின் நினைவு தினம் அனுசரிப்பு

14th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான மறைந்த கே.தங்கவேலின் 2ஆம் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் திருப்பூரில் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.

திருப்பூா் தெற்குத் தொகுதி முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினரான மறைந்த கே.தங்கவேலின் 2ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி மாநகராட்சி அலுவலகம் முன்பாக அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி நிா்வாகிகள் நினைவு அஞ்சலி செலுத்தினா்.

இந்த அஞ்சலி நிகழ்ச்சிக்கு மாா்க்சிஸ்ட் கட்சியின் தெற்கு ஒன்றியச் செயலாளா் சி.மூா்த்தி தலைமை வகித்தாா். இதில், திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன், திருப்பூா் தெற்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினரும், மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளருான க.செல்வராஜ், மதிமுக மாநில அவைத்தலைவா் சு.துரைசாமி, காங்கிரஸ் மாநகா் மாவட்டத் தலைவா் ஆா்.கிருஷ்ணன், மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாா், முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவா் சையது முஸ்தபா, மாா்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் செ.முத்துக்கண்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT