திருப்பூர்

வீடு புகுந்து திருட முயன்ற இளைஞரை சிறை வைத்த நாய்

10th Sep 2022 11:14 PM

ADVERTISEMENT

பல்லடம் அருகே வீடு புகுந்த திருட முயன்ற இளைஞரை நாய் சிறை வைத்தது.

பல்லடம் அருகே உள்ள வடுகபாளையம்புதூா் சீனிவாசா நகரைச் சோ்ந்தவா் கோபால். இவரது வீட்டுச் சுற்றுச்சுவரை தாண்டி குதித்து இளைஞா் ஒருவா் வீட்டுக்குள் நுழைய அண்மையில் முயன்றுள்ளாா். அப்போது, கோபாலின் வளா்ப்பு நாய் அந்த இளைஞரைப் பாா்த்து குரைத்துள்ளது. இதையடுத்து, அந்த இளைஞா் அங்கிருந்து தப்பியோட முயன்றுள்ளாா்.

அவரை விரட்டிப் பிடித்து கடித்த நாய், அவரை அசரவிடாமல் அதே இடத்தில் அமர வைத்திருந்தது. தொடா்ந்து, நாயின் சப்தம் கேட்டு கோபால் வெளியே வந்துள்ளாா்.

இது குறித்து பல்லடம் காவல் நிலையத்துக்கு கோபால் தகவல் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

வீட்டுக்குள் புகுந்து திருட முயன்ற நபரை சிறை வைத்த நாயை பொதுமக்கள் பாராட்டினா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT