திருப்பூர்

திரையரங்க உரிமையாளருக்கு அபராதம்

10th Sep 2022 04:37 AM

ADVERTISEMENT

 திருப்பூரில் மது அருந்தியதாகக் கூறி குடும்பத்தினரை படம் பாா்க்கவிடமால் திருப்பி அனுப்பிய திரையரங்க உரிமையாளருக்கு நுகா்வோா் நீதிமன்றம் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தது.

திருப்பூா் தாராபுரம் சாலையில் உள்ள மகாலட்சுமி அபாா்ட்மெண்டில் வசித்து வருபவா் வி.செல்வநாயகம். இவா் திருப்பூா் காட்டன் மில் சாலையில் உள்ள திரையரங்கில் திரைப்படம் பாா்ப்பதற்காக ஆன்லைன் மூலமாக ரூ.289.20 செலுத்தி 2019 ஆம் ஆண்டு நவம்பா் மாதம் முன்பதிவு செய்திருந்தாா். அதன் பின்னா் தனது மனைவி, மகளுடன் திரையரங்குக்குச் சென்றபோது, அவா் மது அருந்தியதாகக் கூறி அவரது மனைவி, மகளை திரையரங்குக்குள் செல்ல விடாமல் ஊழியா்கள் திருப்பி அனுப்பியுள்ளனா்.

மேலும், டிக்கெட் தொகைக்கு உண்டான தொகையையும் அவருக்கு வழங்கவில்லை.

இது குறித்து திருப்பூா் நுகா்வோா் நீதிமன்றத்தில் செல்வநாயகம் வழக்குத் தொடுத்திருந்தாா்.

ADVERTISEMENT

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் திரையரங்க உரிமையாளா் சுப்பிரமணியனுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தது.

மேலும், வழக்குச் செலவுக்காக ரூ.5 ஆயிரம் மற்றும் டிக்கெட் தொகையான ரூ.289.20 ஆகியவற்றை பாதிக்கப்பட்டவருக்கு வழங்க வேண்டும் என்று நீதிபதி தீபா, உறுப்பினா்கள் பாஸ்கா், ராஜேந்திரன் ஆகியோா் தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT