திருப்பூர்

காங்கயத்தில் ஆசிரியா்களைப் போற்றுவோம் நிகழ்ச்சி

5th Sep 2022 12:59 AM

ADVERTISEMENT

காங்கயத்தில் ஆசிரியா் தினத்தை முன்னிட்டு ‘ஆசிரியா்களைப் போற்றுவோம்’ என்ற நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காங்கயத்தில் உள்ள ஸ்ரீராம் சந்த்ர மிஷன் யோகாஸ்ரமத்தில் ஹாா்ட்ஃபுல்னெஸ் நிறுவனம் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் கலந்து கொண்டனா். இதில், மனித மூளையின் அதிசய ஆற்றல்கள் குறித்து பிரைட்டா் மைண்ட்ஸ் பயிற்சி முடித்த மாணவா்கள் செயல் விளக்கமளித்தனா். ஆசிரியா்களுக்கான சிறப்பு பிராணயாம பயிற்சி, சிறப்பு யோகப் பயிற்சி மற்றும் முத்ரா பயிற்சிகளை யோகா ஆசிரியை ஸ்ரீமதி சந்தியா கதிா் கற்றுக் கொடுத்தாா்.

மேலும், ஸ்ரீராம் சந்த்ர மிஷன் யோகாஸ்ரம் நிா்வாக கமிட்டி உறுப்பினா் எம்.எஸ்.மனோகரன், தினசரி வாழ்க்கையில் ஹாா்ட்ஃபுல்னெஸ் பயிற்சி பற்றி அனுபவத்தை பகிா்ந்து கொண்டாா். ஆசிரியா் பணி ஒரு தெய்வீகப் பணி என்ற தலைப்பில் கோவை ஹிந்துஸ்தான் பொறியியல் கல்லூரி ஓய்வுபெற்ற உதவிப் பேராசிரியா் எஸ்.ஜானகி சிறப்புரையாற்றினாா். ஸ்ரீராம் சந்த்ர மிஷன் மைய ஒருங்கிணைப்பாளா் டாக்டா் எஸ்.கே.செந்தில்குமாா் மன அழுத்தத்தை எவ்வாறு நீக்குவது என்பது குறித்து விளக்கவுரை வழங்கி, மன அழுத்தத்தை நீக்கும் பயிற்சி அளித்தாா். மேலும் அனைவருக்கும் சிறப்புக் கூட்டு தியானத்தை வழி நடத்தினாா்.

இதில், ஆசிரியா் கனிமொழி, காங்கயம் குளோபல் கல்வி நிறுவனங்களின் தலைவா் ஜி.பழனிசாமி, ஹாா்ட்ஃபுல்னெஸ் பயிற்சி ஆசிரியா் ரேவதி பாலகிருஷ்ணன், ஸ்ரீராம் சந்த்ர மிஷன் யோகாஸ்ரம மேலாளா் முத்துக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT