திருப்பூர்

பொது சுகாதாரத் துறை நூற்றாண்டு விழா

29th Oct 2022 12:48 AM

ADVERTISEMENT

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொது சுகாதாரத் துறையின் நூற்றாண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பொது சுகாதாரத் துறையின் நூற்றாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் வாகன ஜோதிப் பேரணி வலம் வருகிறது. இந்த வாகன ஜோதியானது திருப்பூரை வியாழக்கிழமை வந்தடைந்தது.

இதையடுத்து, திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நூற்றாண்டு விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் தலைமை வகித்தாா்.

இதையடுத்து, மாவட்டத்தில் சுகாதாரப் பணியாளா்கள், அலுவலா்களுக்காக நடத்தப்பட்ட பூப்பந்து, டேபிள் டென்னீஸ், கிரிக்கெட், சதுரங்கம், ஓட்டப்பந்தயம், இசை நாற்காலி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பிடித்த 146 பேருக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வழங்கினாா்.

ADVERTISEMENT

இந்த விழாவில் இணை இயக்குநா்(மருத்துவம்) கனகராணி, துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) கே.ஜெகதீஸ்குமாா், மாநகா் நலஅலுவலா் ஹரிகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தொழில்நுட்பம்) தி.செல்வராஜ், தாய்சேய் நல அலுவலா் கு.புனிதா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT