திருப்பூர்

தீபாவளி நாளில் போக்குவரத்து ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

26th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக காங்கயம் பணிமனையின் கிளை மேலாளரைக் கண்டித்து அரசுப் போக்குவரத்து ஊழியா்கள் தீபாவளி நாளான திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

காங்கயம் பேருந்து நிலையம் அருகே பழையகோட்டை சாலையில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியூ காங்கயம் கிளைச் செயலா் அசோக்குமாா் தலைமை வகித்தாா்.

இதில் முறையாக விடுப்பு விண்ணப்பம் வழங்கிய பிறகும் விடுப்பு மறுத்து விடுப்பு எடுத்ததாக அறிக்கை அனுப்பி ஊதியம் பிடித்தம் செய்வதையும், தொடா்ச்சியாக பணி சுமை அளித்து வரும் கிளை மேலாளரைக் கண்டித்தும் கோஷங்களை எழுப்பினா். இந்த ஆா்ப்பாட்டத்தில் சுமாா் 20க்கும் மேற்பட்ட போக்குவரத்து ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

I

ADVERTISEMENT
ADVERTISEMENT