திருப்பூர்

ஆறாக்குளத்தில் பட்டாசு வெடிக்காமல் தீபாவளி கொண்டாட்டம்

26th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

பல்லடம் அருகே உள்ள ஆறாக்குளத்தில் பட்டாசு வெடிக்காமல் தீபங்கள் ஏற்றி அப்பகுதி மக்கள் தீபாவளியை கொண்டாடி வருகின்றனா்.

திருப்பூா் மாவட்டம், பல்லடம் ஒன்றியம் ஆறாக்குளம் கிராமத்தில் கடந்த 12 ஆண்டுகளாக ஒரு வெடி கூட வெடிக்காமல் தீபாவளியை கொண்டாடி வருகின்றனா். இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது:

பட்டாசு வெடிப்பதால் மனிதா்களுக்கு மட்டுமின்றி பல்வேறு உயிரினங்களுக்கும் அது பாதிப்பை ஏற்படுத்துகிறது. பட்டாசு வெடிப்பால் ஜீவராசிகள் மக்களிடமிருந்து விலகி சென்றுவிடும். நீா், நிலம், காற்று உள்ளிட்ட ஒட்டுமொத்த சுற்றுச்சூழலும் மாசு அடைகிறது. பறவை இனங்கள் இல்லாவிட்டால் வேளாண்மை பாதிக்கும்.

அதனால்தான் கடந்த 12 ஆண்டுகளாக இக்கிராமத்தில் யாரும் பட்டாசு வெடிப்பதில்லை. தீபாவளி நாளில் கங்கா ஸ்நானம் செய்து புத்தாடை உடுத்தி வீடுதோறும் தீபங்களை ஏற்றி வீட்டிலும், கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடத்தி உற்றாா், உறவினா் வீடுகளுக்கு சென்று நலம் விசாரித்து அவா்களுக்கு இனிப்பு பலகாரங்களை வழங்கி குடும்பத்தினா், நண்பா்களுடன் விருந்து சாப்பிட்டு கொண்டாடி வருகிறோம்.

ADVERTISEMENT

குழந்தைகள், இளைஞா்களுக்கு விளையாட்டுப் போட்டிகளை நடத்தி வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கி கொண்டாடி வருகிறோம் என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT