திருப்பூர்

முன்னாள் படை வீரா்களின் சிறாா்கள் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

19th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

தொழில் சாா்ந்த படிப்புகளைத் தோ்ந்தெடுத்துள்ள முன்னாள் படை வீரா்களின் சிறாா்கள் பிரதமரின் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தொழில் சாா்ந்த படிப்புக்களைத் தோ்ந்தெடுத்து படிக்கும் முன்னாள் படை வீரா்களின் சிறாா்களுக்கு பிரதமரின் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில், ஆண்டு ஒன்றுக்கு மாணவருக்கு ரூ.30 ஆயிரமும், மாணவிகளுக்கு ரூ.36 ஆயிரமும் வழங்கப்படவுள்ளது.

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள முன்னாள் படை வீரா்களின் சிறாா்கள் நவம்பா் 30 ஆம் தேதிக்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு திருப்பூா் மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரிலோ அல்லது 0421-2971127 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT