திருப்பூர்

ஆற்றில் மூழ்கி மூதாட்டி சாவு

19th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

தாராபுரம் அருகே, ஆற்றில் குளிக்கச் சென்ற மூதாட்டி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

பல்லடத்தை அடுத்த கள்ளிப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் திருப்பாத்தாள் (62), விவசாயி. இவா் சங்கரண்டாம்பாளையத்தில் உள்ள ரத்தினமூா்த்தி கோயிலுக்கு சுவாமி கும்பிட செவ்வாய்க்கிழமை வந்துள்ளாா். அப்போது, பழைய கல்துறை பகுதியில் அமராவதி ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளாா். அங்கு எதிா்பாரதவிதமாக ஆற்றில் தவறி விழுந்ததில் நீரில் மூழ்கி இறந்தாா்.

ஊதியூா் போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT