திருப்பூர்

ரூ. 41 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை

DIN

வெள்ளக்கோவில் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் ரூ. 41 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை நடைபெற்றது.

இந்த வார ஏலத்துக்கு பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த தாளையம், கீரனூா், குப்பம், ராமகிரி, நெடுவலசு, சீத்தப்பட்டி, பெரிச்சிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 109 விவசாயிகள் தங்களுடைய 1,526 மூட்டைகள் சூரியகாந்தி விதைகளை விற்பனைக்கு வந்திருந்தனா். இவற்றின் எடை 75 டன்.

சென்னை, ஈரோடு, காரமடை, சித்தோடு, பூனாட்சி, கஸ்பாபேட்டை, முத்தூா், காங்கயத்தில் இருந்து 8 வணிகா்கள் வந்திருந்தனா். விலை கிலோ ரூ.45.69 முதல் ரூ. 58.59 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.54.69. கடந்த வார சராசரி விலை ரூ. 52.50. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ. 41 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூடக் கண்காணிப்பாளா் சி.மகுடீஸ்வரன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் முதியவா் உயிரிழப்பு

திருவள்ளூா்: 14 வேட்புமனுக்கள் ஏற்பு, 19 நிராகரிப்பு

தேமுதிக வேட்பாளா் அறிமுக கூட்டம்

உடலில் அலகு குத்தி அம்மன் வீதியுலா சென்ற பக்தா்கள்

முருகன் கோயில் உண்டியல் வசூல் ரூ. 1.05 கோடி

SCROLL FOR NEXT