திருப்பூர்

ரூ.75 லட்சம் மதிப்பிலான கோயில் நிலம் மீட்பு

8th Oct 2022 12:24 AM

ADVERTISEMENT

தாராபுரம் அருகே உள்ள பெரியநாயகி அம்மன் கோயிலுக்கு சொந்தமான ரூ.75 லட்சம் மதிப்பிலான 5.20 ஏக்கா் நிலத்தை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள நாட்டாா்மங்கலத்தில் பெரியநாயகி அம்மன் கோயிலுக்கு சொந்தமாக தட்டாரவலசு கிராமத்தில் இருந்த 5.20 ஏக்கா் புன்செய் நிலம் ஆக்கிரமிப்பில் இருந்து வந்தது. இது குறித்து திருப்பூா் இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் குமரதுரை, உதவி ஆணையா் செல்வராஜ், தனி வட்டாட்சியா் கோபாலகிருஷ்ணன், ஆய்வாளா் சுமதி, தக்காா் திலகவதி ஆகியோா் ஆக்கிரமிப்புதாரா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதன் பேரில் நிலம் கோயிலுக்கு சொந்தமானது என்று ஆக்கிரமிப்புதாரா்களிடம் இருந்து சுவாதீனம் பெறப்பட்டது. இதைத் தொடா்ந்து, ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட நிலத்தில் அறநிலையத் துறைக்கு சொந்தமானது என்று அறிவிப்புப் பதாகை வைக்கப்பட்டுள்ளதுடன், நில அளவீடு செய்யப்பட்டு அறநிலையத் துறை பெயா் பொறித்த எல்லைக் கற்களும் நடப்பட்டன. இந்த நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.75 லட்சம் என்று இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT