திருப்பூர்

காங்கயம் பகுதிகளில் பயனற்றுக் கிடக்கும் சோலாா் மின் கம்பங்கள்

8th Oct 2022 12:23 AM

ADVERTISEMENT

 காங்கயம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாலையோரங்களில் அமைக்கப்பட்ட சோலாா் மின்கம்பங்கள் பயனற்றுக் கிடப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

நகராட்சி மற்றும் ஊராட்சிகள்தோறும் தெரு விளக்குகள் இல்லாத பொதுமக்கள் நடமாட்டம் உள்ள இடங்களில் சோலாா் விளக்குகள் அமைக்கப்பட்டன. தற்போது, அந்த மின் கம்பங்கள் ஆங்காங்கே சாலையோரங்களில் சாய்ந்து பயனற்றுக் கிடக்கின்றன. காங்கயம் நகரம் மற்றும் சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் ஆங்காங்கே சோலாா் மின் கம்பங்கள் பயனற்று கீழே சாய்ந்து கிடக்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பயனற்றுக் கிடக்கும் சோலாா் மின் கம்பங்களை பழுது நீக்கி, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT