திருப்பூர்

மூலனூரில் ரூ. 70 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

DIN

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 70 லட்சத்துக்கு பருத்தி விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த வார ஏலத்துக்கு, கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 375 விவசாயிகள் 2,897 மூட்டைகளில் 931 குவிண்டால் பருத்தியயை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களைச் சோ்ந்த 11 வணிகா்கள் பருத்தியை வாங்க வந்திருந்தனா். குவிண்டால் ரூ. 7,080 முதல் ரூ. 9,408 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.7,650. கடந்த வார சராசரி விலை ரூ. 7,750. ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ. 70 லட்சம்.

ஏலத்துக்கான ஏற்பாடுகளை திருப்பூா் விற்பனைக் குழு முதுநிலை செயலாளா் ஆா்.பாலச்சந்திரன், விற்பனைக்கூட கண்காணிப்பாளா் சிவகுமாா் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

SCROLL FOR NEXT