திருப்பூர்

சிறுமிக்குப் பாலியல் தொல்லை:தொழிலாளி போக்ஸோவில் கைது

7th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

திருப்பூா் அருகே சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி போக்ஸோவில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருப்பூரை அடுத்த மங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட தறிகுடோனில் வேலை செய்து வரும் தம்பதியின் 12 வயது மகள் அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்த சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடா்ந்து அவரை மங்கலத்தில் உள்ள மருத்துவமனைக்கு தந்தை அழைத்துச் சென்றுள்ளாா். ஆனால் அங்கு மருத்துவா் இல்லாததால் சிறுமியை மட்டும் அமர வைத்துவிட்டு அவரது தந்தை வெளியே நின்று கொண்டிருந்தாா். இந்த சமயத்தில் அங்கு வந்த நபா் ஒருவா் சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிகிறது. இதுகுறித்து பல்லடம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோா் புகாா் அளித்துள்ளனா். இந்தப் புகாரின்பேரில் விசாரணை நடத்திய காவல் துறையினா் போக்ஸோ சட்டத்தின்கீழ் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த

பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த எம்.மகேஷ்பிரசாத்(44) என்பவரைக் கைது செய்தனா். இவா் மங்கலம் பகுதியில் தங்கியிருந்து தனியாா் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT