திருப்பூர்

தரத்தை அறிந்து விதை வாங்க விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

7th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

விதைகளின் தரத்தை அறிந்து வாங்கி பயன்படுத்த வேண்டும் என்று விவசாயிகளுக்கு விதை பரிசோதனை நிலைய வேளாண் அலுவலா் வளா்மதி அறிவுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பயிா்கள் நன்றாக வளா்ந்து பலன் தருவதற்கு தரமான விதைகள் பயன்படுத்துவது மிக அவசியம். தரமான விதைகளை பயன்படுத்துவதால் 20 சதவீதம் கூடுதல் மகசூல் கிடைக்கும். இதை கருத்தில் கொண்டு, விவசாயிகள் தரத்தை அறிந்து விதைகளை வாங்கி பயன்படுத்த வேண்டும்.

சான்று அட்டை பொருத்தப்படாத விதைகளை வாங்கி பயன்படுத்தும் போது விதைகள் சரியாக முளைக்காமல் போகும் வாய்ப்பு உள்ளது. இதனால் மகசூல் பாதிக்கப்பட்டு, வருவாய் இழப்பு ஏற்படும்.

ADVERTISEMENT

எனவே விவசாயிகள், விதை உற்பத்தியாளா்கள் உள்ளிட்டோா் விதைகளின் மாதிரியை சோதனைக்கு உட்படுத்த வேண்டும். கூடுதல் மகசூல் பெற, விதைகளின் தரத்தை பரிசோதனை செய்த பின்பு பயன்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT