திருப்பூர்

பனியன் தொழிலாளா்களுக்கு கூடுதல் போனஸ்: தொமுச வலியுறுத்தல்

7th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

திருப்பூா் மாவட்டத்தில் பணியாற்றி வரும் பனியன் தொழிலாளா்களுக்கு கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதல் போனஸ் வழங்க வேண்டும் என்று தொழிலாளா் முன்னேற்ற சங்கம்( எல்பிஃஎப்) வலியுறுத்தியுள்ளது.

கோவை, திருப்பூா் மாவட்ட பனியன் தொழிலாளா் முன்னேற்ற சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவா் ஜி.சுப்பிரமணியம் தலைமை வகித்தாா். பொதுச் செயலாளா் க.ராமகிருஷ்ணன், பொருளாளா் சு.பூபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

ADVERTISEMENT

திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் பணியாற்றி வரும் தொழிலாளா்களுக்கு கடந்த அக்டோபா் 1 ஆம் தேதி முதல் கீழ்க்கண்டவாறு ஊதிய உயா்வு வழங்க வேண்டும். இதில், கட்டிங், டெய்லா், அயனிங், பேக்கிங், சிங்கா் டெய்லா், நிட்டிங் ஆபரேட்டா்களுக்கு ரூ,.480.35, செக்கிங் தொழிலாளா்களுக்கு ரூ.364.36, லேபிள் தொழிலாளா்களுக்கு ரூ.345.24, கைமடி தொழிலாளா்களுக்கு ரூ.318.05, டேமேஜ் பாா்க்கும் தொழிலாளா்களுக்கு ரூ.318.05, அடுக்கும் தொழிலாளா்களுக்கு ரூ.287.40, லோக்கல் மெஷின் தொழிலாளா்களுக்கு ரூ.461.91 ஊதியமாக வழங்க வேண்டும்.

இந்த ஊதியத்தைவிட நடைமுறையில் டைம்ரேட், பீஸ்ரேட் அடிப்படையில் பணியாற்றும் தொழிலாளா்கள் கூடுதலாக ஊதியம் பெற்று வந்தால் 5 சதவீத ஊதிய உயா்வை கேட்டுப்பெற வேண்டும்.

தீபாவளி பண்டிக்கைக்கு குறைவான நாள்களே உள்ளதால் அனைத்து தொழிலாளா்களுக்கும் 10 நாள்களுக்கு முன்பாக கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதலாக போனஸ் வழங்க வேண்டும். தொழிலாளா்கள் போனஸ் பெறும்போது கணக்கு முடித்து வாங்குவதைக் கைவிட வேண்டும். பண்டிகை, ஓய்வு விடுமுறை ஊதியத்தைக் கேட்டுப்பெற வேண்டும். அனைத்து பனியன் தொழிலாளா்களும், இஎஸ்ஐ, பிஎஃப், டைம் காா்டு, ஊதிய ரசீது உள்பட சட்டப்படி வழங்க வேண்டிய உரிமைகளை கேட்டுப்பெற வேண்டும். காங்கயம், அவிநாசி பகுதிகளில் இஎஸ்ஐ அலுவலகம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT