திருப்பூர்

பொங்கலூா் அரசுப் பள்ளியில் ஸ்மாா்ட் வகுப்பறை திறப்பு

7th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

பல்லடம் அருகே பொங்கலூா் பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஸ்மாா்ட் வகுப்பறை திறப்பு விழா நடைபெற்றது.

பொங்கலூா் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சேமலைக்கவுண்டம்பாளையும், மசநல்லாம்பாளையம், நாச்சிபாளையம், தாயம்பாளையம் ஆகிய பள்ளிகளில் ஸ்மாா்ட் வகுப்பறை தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து தொங்குட்டிபாளையம் ஊராட்சி, பெருந்தொழுவு வாரச் சந்தையில் ரூ.21.12 லட்சத்தில் சந்தை மேம்பாட்டு பணி, ரூ.5.49 லட்சத்தில் கான்கிரீட் தளம் பணி, கரட்டுப்பாளையத்தில்ரூ.2.66 லட்சத்தில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி, பெருந்தொழுவு ஊராட்சியில் ரூ.4.65 லட்சத்தில் பாதாள சாக்கடை பணி ஆகியவற்றுக்கு பூமிபூஜை நடைபெற்றது.

ஸ்மாா்ட் வகுப்பறை மற்றும் வளா்ச்சிப் பணிகளை பல்லடம் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தொடங்கிவைத்தாா்.

ADVERTISEMENT

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அதிமுக அவைத் தலைவா் சிவாச்சலம், பொங்கலூா் ஒன்றிய செயலாளா்கள் யு.எஸ்.பழனிசாமி, காட்டூா் சிவப்பிரகாஷ், ஊராட்சித் தலைவா்கள் ரவிச்சந்திரன், பிரியா நடராஜன், மாவட்ட எம்.ஜி.ஆா். மன்ற செயலாளா் மோகன்ராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT