திருப்பூர்

வாவிபாளையம் மையத்தில் கொப்பரை கொள்முதல்

7th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

பல்லடம் அருகே வாவிபாளையம் கொப்பரை கொள்முதல் மையத்தில் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

இது குறித்து பல்லடம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத் தலைவா் ஏ.சித்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:

பல்லடம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் சாா்பில் வாவிபாளையம் கொள்முதல் மையத்தில் அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலைத் திட்டத்தின்படி, 6 சதவீதத்துக்குள் ஈரப்பதத்துடன் சீரான சராசரி தரத்தில் உள்ள கொப்பரை கிலோ ரூ. 105.90க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.

இதற்காக விவசாயிகள் ஆதாா் (அல்லது) வாக்காளா் அடையாள அட்டை உள்ளிட்ட சுய விவரங்கள் மற்றும் விளைச்சல் விவரங்களுக்கான சான்றிதழ் ஆகியவற்றுடன் சங்கத்தை அணுகி கொப்பரையை விற்பனை செய்து பயனடையலாம் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT