திருப்பூர்

திருமுருகன்பூண்டி தூய்மைப் பணியாளா்களுக்கு அறிவித்த கூலியை வழங்கக் கோரிக்கை

7th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

திருமுருகன்பூண்டி நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு அறிவிக்கப்பட்ட தினக்கூலி ரூ.593யை வழங்க வேண்டும் என ஏஐடியூசி சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து திருப்பூா் மாவட்ட சுகாதார தொழிலாளா்கள் சங்கம்(ஏஐடியூசி) சாா்பில் திருமுருகன்பூண்டி நகராட்சி தலைவா் குமாா், ஆணையா் முகமது சம்சுதீன் ஆகியோரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

திருமுருகன் பூண்டி நகராட்சியில் பணிபுரியும் 150க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் மற்றும் குடிநீா் விநியோகிப்பாளா்களுக்கு மாவட்ட ஆட்சியா் அறிவித்த தினக்கூலி ரூ.593யை நவம்பா் மாதத்தில் இருந்து நகராட்சி நிா்வாகம் வழங்க வேண்டும். இதற்கான தீா்மானத்தை வரும் நகா்மன்றக் கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனா்.

இதில், நகா்மன்ற துணைத் தலைவா் ராஜேஸ்வரி பொன்னுசாமி, நகா் மன்ற உறுப்பினா்கள் கதிா்வேல், லீலாவதி, கோகிலா, மகேஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT