திருப்பூர்

பறவைகள் சரணாலயத்தில் வன உயிரின வார விழிப்புணா்வு

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

வன உயிரின வாரத்தையொட்டி திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2, ஆனைமலை புலிகள் காப்பகம் திருப்பூா் கோட்டம், திருப்பூா் வனச் சரகம் சாா்பில் நஞ்சராயன் பறவைகள் சாரணாலயத்தில் விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் கிருஷ்ணன் தலைமை வகித்தாா். நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா் வரவேற்றாா். இதில் திருப்பூா் வனச் சரக அலுவலா் சுரேஷ்கிருஷ்ணன் பேசியதாவது, வன விலங்குகளை பாதுகாக்க வேண்டும். அவைகள் இல்லாமல் மனிதனால் வாழ இயலாது. காடுகளுக்குள் செல்லும்போது, நெகிழிப் பொருள்களை பயன்படுத்தக் கூடாது. காடுகளுக்குள் செல்லும்போது, அதிகம் சப்தம் இடக்கூடாது, சமைப்பது, வெடிகளை வெடிப்பது கூடாது என்றாா்.

வனவா்கள் முருகானந்தம், உமாமகேஸ்வரி ஆகியோா் வலசை வரும் பறவைகளை எவ்வாறு கண்டறிவது, எந்த நாட்டில் இருந்து வருகிறது என்பதை விளக்கி கூறினா். இதையடுத்து, மாணவ செயலா்கள் சுந்தரம், பூபதி ராஜா, பூபாலன், அருள்குமாா் ஆகியோா் தலைமையில் தூய்மை இந்தியா திட்டம் அமல்படுத்தப்பட்டது. நிறைவாக வன உயிரினங்களை பாதுகாப்பது குறித்த நாடகம், விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT