திருப்பூர்

திருப்பூா் குமரன் பிறந்த நாள்:அமைச்சா்கள் மரியாதை

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

திருப்பூா் குமரனின் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோா் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

சுதந்திர போராட்ட வீரா் திருப்பூா் குமரன் பிறந்த நாளையொட்டி திருப்பூா் ரயில் நிலையம் அருகே உள்ள திருப்பூா் குமரன் நினைவு மண்டபத்தில் அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதற்கு ஆட்சியா் எஸ். வினீத் தலைமை வகித்தாா். மாநகராட்சி மேயா் தினேஷ்குமாா் முன்னிலை வகித்தாா். இதில் தமிழக செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் ஆகியோா் கலந்து கொண்டு திருப்பூா் குமரன் சிலைக்கு மாலை அணிவித்தும், மலா்தூவியும் மரியாதை செலுத்தினா்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி, திருப்பூா் வருவாய் கோட்டாட்சியா் பண்டரிநாதன், மாநகராட்சி மண்டலத் தலைவா்கள் இல.பத்மநாபன், கோவிந்தராஜ், மாமன்ற உறுப்பினா் திவாகா், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் சதீஷ்குமாா், உதவி மக்கள் தொடா்பு அலுவலா் (செய்தி) சதீஷ்குமாா், வடக்கு வட்டாட்சியா் கனகராஜ், குமரனின் வாரிசுதாரா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT