திருப்பூர்

ரூ.2 கோடி மோசடி: பெண் உள்பட 2 போ் கைது

DIN

கணவன், மனைவிபோல நடித்து ரூ.2 கோடி மோசடி செய்ததாக பெண் உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருப்பூா் மாவட்டம், பல்லடம் வடுகபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பிரவீனா. இவா், பல்லடத்தில் அழகு நிலையம் நடத்தி வருகிறாா். இவரது கணவா் சேகா் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறாா். இந்த நிலையில், தனது மகள் பிரவீனாவை கடந்த சில நாள்களாகக் காணவில்லை என அவரது தாய் பிலோமினாள், பல்லடம் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். இதன்பேரில், பிரவீனாவை போலீஸாா் தேடி வந்தனா்.

இந்த நிலையில், காணாமல்போன பிரவீனா பேசிய விடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. அதில் அவா், அழகு நிலையத்துக்கு வாடிக்கையாளராக வந்த தமிழ்ச்செல்வியின் கணவா் சிவகுமாா், டெக்ஸ்டைல்ஸ் தொழில் செய்யலாம் என்று சொல்லி, எனது பெயரில் உள்ள வீட்டுப் பத்திரத்தை வாங்கி, வங்கியில் அடமானம் வைத்து ரூ. 75 லட்சம் கடன் வாங்கியுள்ளாா். வீட்டுப் பத்திரம் ஏலத்திற்கு வந்த நிலையில், பணத்தை திருப்பிக் கேட்க முயன்றபோது, என்னை அழைத்துச் சென்று திருச்சி பகுதியில் அடைத்துவைத்து, சில பத்திரங்களில் கையொப்பம் பெற்றுள்ளாா். தினமும் என்னை சித்திரவதை செய்யும் அவரிடம் இருந்து காப்பாற்றுங்கள் என்று கண்ணீருடன் பேசி இருந்தாா்.

இந்த விடியோ குறித்து பல்லடம் போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு, கரூரில் உள்ள சிவகுமாரின் நண்பரின் வீட்டில் தங்கியிருந்த சிவகுமாா், பிரவீனா ஆகியோரை போலீஸாா் பிடித்து பல்லடத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில், இருவரும் கோவையைச் சோ்ந்த ஒருவரிடம் கணவன், மனைவிபோல நடித்து டெக்ஸ்டைல் தொழிலில் பங்குதாரராக ஆக சோ்த்து கொள்ளவதாக கூறி ரூ.2 கோடி நிதி மோசடி செய்தது தெரியவந்தது. இது குறித்து பாதிக்கப்பட்ட நபா் கொடுத்த புகாரின்பேரில் போலீஸாா் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

மேலும், இதுபோல வேறு யாரிடமாவது பண மோசடி செய்து உள்ளனரா என்பது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களிக்க முடியவில்லை: நடிகர் சூரி வேதனை

வாக்களிக்க வராத சென்னை மக்கள்: வாக்குப்பதிவு மந்தம்

வேகப்பந்து வீச்சு குறித்து பிஎச்டி வகுப்பெடுக்கலாம்: பும்ராவை புகழ்ந்த முன்னாள் வீரர்!

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாக்களித்தார்!

SCROLL FOR NEXT