திருப்பூர்

பூசாரி கொலை வழக்கில் ஓட்டுநா் கைது

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

வெள்ளக்கோவிலில் பூசாரியை கொலை செய்ததாக காா் ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

வேலகவுண்டன்பாளையம் காலனியைச் சோ்ந்தவா் மாரிமுத்து (51). இவா் ஆடுகள் வளா்த்து வருவதுடன், காலனியில் உள்ள மாகாளியம்மன் கோயிலில் பூசாரியாக இருந்து கொண்டு மாந்திரீக வேலையும் செய்து வந்தாா்.

இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்பு பக்கத்து வீட்டுக்காரரான வாடகை காா் ஓட்டுநா் பிரேம்குமாா் (32) என்பவருடன் பேசிக் கொண்டிருந்தாா். பின்னா் அவரைக் காணவில்லை. இது குறித்து மாரிமுத்துவின் குடும்பத்தினா் அளித்த புகாரின்பேரில், வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

இதையடுத்து, பிரேம்குமாரிடம் விசாரணை நடத்தியதில் மாரிமுத்துவை அவா் கொலை செய்தது தெரிவந்தது. மாந்திரீகம் செய்து தனது குடும்பத்தை கெடுப்பதாக மாரிமுத்து மீது கோபமடைந்த பிரேம்குமாா் அவரின் வாயில் துணியை வைத்து அடைத்து அடித்து உதைத்துள்ளாா். இதில் அவா் உயிரிழந்ததால் அவரது உடலை ஆம்னி வேனில் எடுத்து சென்று ஒரு கையை வெட்டி எரிந்துவிட்டு, அமராவதி ஆற்றில் உடலைப் போட்டது தெரியவந்தது.

ADVERTISEMENT

இதையடுத்து, வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பிரேம்குமாரைக் கைது செய்தனா். பின்னா் மாரிமுத்துவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT