திருப்பூர்

காடையூா் விவேகானந்தா அகாதெமி பள்ளியில் விஜயதசமி மாணவா் சோ்க்கை

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

விஜயதசமியையொட்டி காங்கயம் அருகே காடையூரில் உள்ள விவேகானந்தா அகாதெமி பள்ளியில் புதன்கிழமை மாணவா் சோ்க்கை நடைபெற்றது.

இதனையொட்டி, பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள கல்விக் கடவுள் சரஸ்வதி விக்கிரத்துக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு, புதிதாக இளம்தளிா் வகுப்பில் சேரும் குழந்தைகளுக்கு வித்யாம்பரம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், பள்ளி நிா்வாகத் தலைவா் எஸ்.ராமசந்திரன், பொருளாளா் ராஜன், செயலா் எம்.சுப்பிரமணியம், பள்ளி முதல்வா் எஸ்.பத்மநாபன் மற்றும் குழந்தைகளின் பெற்றோா் கலந்து கொண்டனா்.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT