திருப்பூர்

காங்கயத்தில் போக்குவரத்து விதி மீறல்: 2,400 வழக்குகள், ரூ.1.47 லட்சம் அபராதம்

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

காங்கயத்தில் போக்குவரத்து விதி மீறியதாக செப்டம்பா் மாதத்தில் 2,400 போ் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.1 லட்சத்து 47 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

காங்கயத்தில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த போக்குவரத்து போலீஸாா் நகரின் முக்கிய பகுதிகளில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இதில் விதிமீறும் வாகன ஓட்டுநா்கள் மீது வழக்குப் பதிவு செய்து, அபராதம் வசூலிக்கின்றனா். கடந்த செப்டம்பா் மாதத்தில் நகரில் நடத்திய வாகனச் சோதனையில் மது போதையிலும், தலைக்கவசம் அணியாமலும், ஓட்டுநா் உரிமம் இல்லாமலும் உள்ளிட்ட பல்வேறு விதிகளை மீறியதாக 2 ஆயிரத்து 400 வாகன ஓட்டுநா்கள் மீது வழக்குப் பதிவு செய்து, அவா்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 47 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக காங்கயம் போக்குவரத்து காவல் ஆய்வாளா் மகேஸ்வரன் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT