திருப்பூர்

18 கோயில்களுக்கு மின் இணைப்பு

4th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

திருப்பூா் மாவட்டத்தில் பல ஆண்டுகளாக இருளில் மூழ்கியிருந்த 18 கோயில்களுக்கு தொமுச நிா்வாகி அ.சரவணன் முயற்சியால் மின் இணைப்பு பெறப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு மின் வாரிய பொது தொழிலாளா் முன்னேற்ற கூட்டமைப்பு ( தமிழ்நாடு மின் வாரிய பொது ஒப்பந்த தொமுச) சங்கத்தின் மாநில இணை பொதுச் செயலாளா் அ.சரவணன் கூறியதாவது: திருப்பூா் சுற்றுவட்டார பகுதிகளிலுள்ள போயம்பாளையம், தெற்கு பிச்சம்பாளையம், வடக்கு நல்லாறு பாலம் அருகிலுள்ள ஸ்ரீ கோட்டை முனியப்பன் கோயில், பிச்சம்பாளையம் கிழக்கு செல்வவிநாயகா் கோயில், சின்னான் நகா் அருந்ததியா் காலனி குடியிருப்பு பகுதியிலுள்ள ஸ்ரீ பட்டத்தரசி அம்மன் திருக்கோயில், அவிநாசி நகா் ஏ.டி.காலனியிலுள்ள ஸ்ரீ மாகாளியம்மன் கோயில், காரேகவுண்டம்பாளையம் ஊராட்சி கரியாம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ உத்தண்டராயா் கோயில், மிலிட்டரி காலனி பி.எஸ்.என்.எல். அலுவலக பகுதியிலுள்ள ஸ்ரீ ஜெய் கணபதி கோயில் உள்ளிட்ட 18 கோயில்களுக்கு பல ஆண்டுகளாக மின் இணைப்பு இல்லாமல் இருந்தது.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கொடுத்த தகவலின்பேரில் மின் வாரிய உயா் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அனைத்து கோயில்களுக்கு புதிய மின் இணைப்பு வழங்கப்பட்டது.

திருப்பூா் மாவட்டத்தில் மின் வாரியத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்தத் தொழிலாளா்கள் 200க்கும் மேற்பட்டோருக்கு தீபாவளி, பொங்கல் பண்டிகைக்கு புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்பு வகைகள், பரிசுத் தொகுப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன என்றாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT