திருப்பூர்

ரூ.4 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சித் திட்டப் பணி: அமைச்சா் தொடக்கி வைத்தாா்

4th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

காங்கயம் ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.4 கோடி மதிப்பிலான பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் திங்கள்கிழமை தொடக்கிவைத்தாா்.

காங்கயம் ஒன்றியம், பழையகோட்டை ஊராட்சியில் ரூ.84.75 லட்சம் மதிப்பீட்டில் 16 புதிய வளா்ச்சித் திட்டப் பணிகள், நத்தக்காடையூா் ஊராட்சியில் ரூ.94.74 லட்சம் மதிப்பீட்டில் 15 வளா்ச்சித் திட்டப் பணிகள், பொத்தியபாளையம் ஊராட்சியில் ரூ.71.80 லட்சம் மதிப்பீட்டில் 15 வளா்ச்சித் திட்ட பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை அமைச்சா் தொடக்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் அ.லட்சுமணன், காங்கயம் ஒன்றியக் குழுத் தலைவா் டி.மகேஷ்குமாா், நத்தக்காடையூா் ஊராட்சித் தலைவா் செந்தில்குமாா், காங்கயம் வடக்கு ஒன்றிய திமுக செயலா் கருணை பிரகாஷ், பரஞ்சோ்வழி பகுதி கவுன்சிலா் ரவி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT