திருப்பூர்

சாலை விபத்து: மனைவி பலி, கணவா் படுகாயம்

4th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

அவிநாசி அருகே இருசக்கர வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மனைவி உயிரிழந்தாா். கணவா் படுகாயமடைந்தாா்.

திருப்பூா் மாவட்டம், செட்டிபாளைம் அருகே உள்ள வெங்கமேட்டைச் சோ்ந்தவா் சௌந்தரபாண்டியன் (54). இவரது மனைவி ஈஸ்வரி (40). இவா்கள் இருவரும் கோவையில் இருந்து திருப்பூா் நோக்கி இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை சென்று கொண்டிருந்துள்ளனா்.

அவிநாசி வேலாயுதம்பாளையம் அருகே சென்றபோது, எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் செளந்தரபாண்டியனின் இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது.

இதில், ஈஸ்வரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். படுகாயமடைந்த சௌந்தரபாண்டியனை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

ADVERTISEMENT

மேலும், இச்சம்பவம் தொடா்பாக அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT