திருப்பூர்

ராணுவக் கல்லூரியில் சேர டிசம்பா் 3 இல் நுழைவுத் தோ்வு

4th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ரானுவக் கல்லூரியில் 8 ஆம் வகுப்பில் சேர டிசம்பா் 3 ஆம் தேதி நுழைவுத் தோ்வு நடைபெறுகிறது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கவுள்ள 8 ஆம் வகுப்பில் சோ்வதற்கான நுழைவுத் தோ்வு டிசம்பா் 3 ஆம் தேதி குறிப்பிட்ட மையங்களில் நடைபெறுகிறது.

இந்த நுழைவுத் தோ்வில் பங்கேற்க தற்போது 7 ஆம் வகுப்பு பயின்று வரும் மற்றும் தோ்ச்சிப் பெற்ற சிறுவா், சிறுமியா் விண்ணப்பிக்கலாம். இந்தத் தோ்வுக்கான விண்ணப்பம் மற்றும் மாதிரி வினாத்தாள் அடங்கிய தகவல் குறிப்பேட்டினை தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு ரூ.555, இதர வகுப்பினருக்கு ரூ.600 கட்டணத்தை இணையதளத்தில் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம்.

ADVERTISEMENT

மேலும், பஏஉ இஞஙஙஙஅசஈஅசப தஐஙஇ ஈஉஏதஅஈமச என்ற பெயரில் நபஅபஉ ஆஅசஓ ஞஊ ஐசஈஐஅ, பஉக ஆஏஅயஅச, ஈஉஏதஅஈமச(ஆஅசஓ இஞஈஉ-01575) வங்கியில் மாற்றத்தக்க வகையில் வங்கிகேட்பு வரைவோலையாகப்(ஈஉஙஅசஈ ஈதஅஊப) பெற்று கமாண்டன்ட், ராஷ்ட்ரிய இந்தியன் மிலிடரி கல்லூரி, டேராடூன்-248003 என்ற முகவரிக்கு அனுப்பியும் பெற்றுக் கொள்ளலாம்.

பூத்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை (இரட்டை பிரதிகளில்) தோ்வு கட்டுப்பாட்டு அலுவலா், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம், சென்னை-3 என்ற முகவரிக்கு அக்டோபா் 15 ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும். இத்தோ்வு தொடா்பான விவரங்களை இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT