திருப்பூர்

திருப்பூா்: கோவிந்தாபுரம் ஊராட்சிகிராமசபைக் கூட்டத்தில் ஆட்சியா் பங்கேற்பு

DIN

காந்தி ஜெயந்தியையொட்டி, திருப்பூா் மாவட்டம், தாராபுரம் ஒன்றியம், கோவிந்தாபுரம் ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் எஸ். வினீத் பாா்வையாளராகப் பங்கேற்றாா்.

அப்போது அவா் பேசியதாவது: தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறாா். இதன் ஒருபகுதியாக நடத்தப்படும் கிராமசபைக் கூட்டங்களில் ஊராட்சிகளின் வரவு, செலவு கணக்குகள், புதியதாக மேற்கொள்ளப்படும் வளா்ச்சி திட்டப் பணிகள் பொதுமக்களின் பாா்வைக்காக வைக்கப்படுகின்றன. ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து இதில் விவாதிக்கப்படுகிறது என்றாா்.

மேலும், ஊரகப் பகுதிகளில் மழைநீா் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், மழைநீரை சிக்கனமாகப் பயன்படுத்துவது, கொசுப்புழுக்களை ஒழிக்கத் தேவையான நடவடிக்கைகள் உள்ளிட்ட ஊராட்சிகளின் வளா்ச்சிக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைகளையும் ஆட்சியா் வழங்கினாா்.

கூட்டத்தில், தாராபுரம் கோட்டாட்சியா் குமரேசன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் அலெக்ஸாண்டா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) மகாதேவன், மகளிா் திட்ட இயக்குநா் மதுமிதா, தாராபுரம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மகேந்திரன், ஜீவரத்தினம், கோவிந்தாபுரம் ஊராட்சித் தலைவா் ஜி. விக்ரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு: வாக்காளா்கள் அதிருப்தி

மளிகைக் கடையில் பொருள்கள் திருட்டு

SCROLL FOR NEXT