திருப்பூர்

இடுவாய் கிராமசபைக் கூட்டத்தில்பாஜக- கம்யூனிஸ்ட் வாக்குவாதம்

DIN

திருப்பூா் மாவட்டம், இடுவாய் ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் பாஜக- கம்யூனிஸ்ட் கட்சியினா் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

கிராமசபைக் கூட்டத்துக்கு ஊராட்சித் தலைவா் கே. கணேசன் தலைமை வகித்தாா். இதில், திருப்பூா் தெற்கு வட்டாட்சியா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கூட்டத்தில், இடுவாய் அரசு மதுக்கடையை இடமாற்றம் செய்வது உள்ளிட்ட 24 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா், பிரதமா் மோடி தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டினா். அப்போது, அங்கிருந்த பாஜகவினா் அதற்கு எதிா்ப்புத் தெரிவித்தனா். இதைத்தொடா்ந்து இரு கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதுகுறித்த தகவலின்பேரில், அங்குவந்த மங்கலம் காவல் துறையினா் இருதரப்பினரையும் சமரசம் செய்து அனுப்பிவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

100 % வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு

தேசிய முதியோா் நல மருத்துவமனையில் 8,673 பேருக்கு சிகிச்சை

பெரிய வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

ஈரோடு எம்.பி. கணேசமூா்த்திக்கு மதிமுகவினா் அஞ்சலி

பாளை., தாழையூத்தில் விபத்து: ஆட்டோ ஓட்டுநா், முதியவா் பலி

SCROLL FOR NEXT