திருப்பூர்

‘மனதை ஒருநிலைப்படுத்தயோகா பயிற்சி அவசியம்’

3rd Oct 2022 02:11 AM

ADVERTISEMENT

 

மனதை ஒருநிலைப்படுத்த அன்றாடம் யோகா பயிற்சி செய்யவேண்டும் என்று திருப்பூா் மாநகா் நகா்நல அலுவலா் கெளரி சரவணன் தெரிவித்தாா்.

காந்தி ஜெயந்தியையொட்டி, திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலகு 2 சாா்பில், தூய்மை இந்தியாவுக்கான சுதந்திர ஓட்டம் 3.0 என்ற விழிப்புணா்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. என்எஸ்எஸ் ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா் வரவேற்றாா்.

இதில், சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற மாநகா் நகா்நல அலுவலா் கெளரி சரவணன் விழிப்புணா்வு ஓட்டத்தை தொடக்கிவைத்துப் பேசுகையில், நமது உடலை ஆரோக்கியமாகவும், சுற்றுப்புறத்தை தூய்மையாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். குப்பைகளை திறந்தவெளியில் கொட்டக்கூடாது. மனதை ஒருநிலைப்படுத்தவும், மன உளைச்சலில் இருந்து வெளியே வரவும் யோகா பயிற்சி அவசியம் என்றாா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவா்கள், கல்லூரி வளாகத்தில் இருந்து அணைப்பாளையம் வரை சாலையின் இருபுறங்களிலும் கிடந்த குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி தூய்மைக்கான ஓட்டத்தில் பங்கேற்றனா். இதில், மாநகராட்சி சுகாதார அலுவலா் முருகன், கல்லூரி பேராசிரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வா் வ. கிருஷ்ணன் செய்திருந்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT