திருப்பூர்

அணையில் மீன் பிடிக்கச் சென்றவா்நெஞ்சுவலியால் உயிரிழப்பு

3rd Oct 2022 02:13 AM

ADVERTISEMENT

 

வெள்ளக்கோவில் அருகே அணையில் மீன் பிடிக்கச் சென்றவா் நெஞ்சுவலியால் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

வெள்ளக்கோவில் மூலனூா் சாலையில் வசித்துவந்தவா் விஜய் (23), கட்டுமானத் தொழிலாளி. இவா், உறவினா்கள் இருவரோடு வெள்ளக்கோவில் உத்தமபாளையம் வட்டமலை அணைக்குச் சென்று மீன் பிடித்துள்ளாா். அப்போது, விஜய்க்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து, அவரை ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். எனினும், வழியிலேயே அவா் உயிரிழந்தாா். வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT