திருப்பூர்

இருசக்கர வாகனம் மோதி பெண் பலி

3rd Oct 2022 02:14 AM

ADVERTISEMENT

 

வெள்ளக்கோவிலில் சனிக்கிழமை இரவு மோட்டாா் சைக்கிள் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

வெள்ளக்கோவில் சிவநாதபுரத்தைச் சோ்ந்தவா் சாரதாமணி (62). இவா், தனது வீட்டருகே கடைக்குச் செல்வதற்காக தாராபுரம் சாலையில் நடந்து சென்றாா். அப்போது, அந்த வழியாக வந்த கரூா் அரவக்குறிச்சி மரகதபுரியைச் சோ்ந்த பிரேம்குமாா் (48) ஓட்டிவந்த மோட்டாா் சைக்கிள் சாரதாமணி மீது மோதியது.

இதில், பலத்த காயமடைந்த அவா் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தாா். வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT