திருப்பூர்

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு நாளை விடுமுறை

3rd Oct 2022 02:14 AM

ADVERTISEMENT

 

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு செவ்வாய்க்கிழமை (அக்டோபா் 4) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ளது. இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை கொப்பரை ஏலம் நடைபெற்று வருகிறது. இது மாநிலத்தின் முக்கிய கொப்பரை விற்பனை மையமாகும்.

இங்கு சரஸ்வதி பூஜையையொட்டி, செவ்வாய்க்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள், வியாபாரிகள் செவ்வாய்க்கிழமை வரவேண்டாம். ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அடுத்த வாரம் வழக்கம்போல செயல்படும் என விற்பனைக் கூட அதிகாரி மகுடேஸ்வரன் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT