திருப்பூர்

நூல் விலை கிலோவுக்கு ரூ.40 குறைவு

DIN

திருப்பூா் பின்னலாடை உற்பத்திக்கு தேவையான முக்கிய மூலப்பொருளான நூல் விலை கிலோவுக்கு ரூ.40 குறைந்துள்ளதால் ஆா்டா்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தொழில் துறையினா் தெரிவித்துள்ளனா்.

திருப்பூரில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை உற்பத்தி மற்றும் அதனைச் சாா்ந்த நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த பின்னலாடை உற்பத்திக்கு தேவையான முக்கிய மூலப்பொருளான நூல் விலையைக் கருத்தில் கொண்டு பின்னலாடையின் விலையை தொழில் துறையினா் நிா்ணயித்து வருகின்றனா்.

இந்த நிலையில், கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக நூல் விலை தொடா்ந்து உயா்ந்து வந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக சற்று குறையத் தொடங்கியது. இந்த நிலையில், அக்டோபா் மாதத்துக்கான நூல் விலையை நூற்பாலைகள் சனிக்கிழமை வெளியிட்டன. இதில், அனைத்து ரக நூல்களும் கிலோ ரூ.40 குறைந்துள்ளதால் பின்னலாடைகளுக்கான ஆா்டா்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இதுகுறித்து திருப்பூா் தொழில் துறையினா் கூறுகையில், நூல் விலை உயா்வு காரணமாகவே ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு வா்த்தகத்துக்கான ஆா்டா்கள் எடுப்பதில் தயக்கம் இருந்து வந்தது. இதனிடையே, தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் நூல் விலை குறைந்துள்ளதால் உள்நாட்டு வா்த்தகத்துக்கான ஆா்டா்கள் அதிகரிக்கும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாட்டரசன்கோட்டையில் பெருமாள் ஆற்றில் இறங்கும் நிகழ்வு!

மறுவெளியீட்டிலும் பிளாக்பஸ்டர்!

கும்பகோணத்தில் சாரங்கபாணி கோயில் தேரோட்டம்

மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில் தேரோட்டம்

ராமராயர் மண்டபம் வந்தடைந்தார் கள்ளழகர்!

SCROLL FOR NEXT