திருப்பூர்

அரசு மருத்துவமனைகளில் காலிப் பணியிடங்களுக்கு அக்டோபா் 14இல் நோ்காணல்

1st Oct 2022 11:50 PM

ADVERTISEMENT

 

திருப்பூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 61 பணியிடங்களுக்கு அக்டோபா் 14ஆம் தேதி நோ்காணல் நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்டத்தில் தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு மருத்துவமனைகள், துணை இயக்குநா் சுகாதாரப் பணிகள் அலுவலகம் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 61 காலிப் பணியிடங்கள் உள்ளன.

ADVERTISEMENT

இந்தப் பணியிடங்களுக்கான தகுதியான நபா்கள் மாவட்ட நலச்சங்கம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படவுள்ளனா். இதற்கான நோ்காணல் வரும் அக்டோபா் 14ஆம் தேதி காலை 10 மணிக்கு, அறை எண்-240, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், பல்லடம் சாலை, திருப்பூா்-641604 என்ற முகவரியில் நடைபெறவுள்ளது.

இதுதொடா்பான விவரங்களுக்கு  இணையதள முகவரியைப் பாா்வையிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT