திருப்பூர்

திமுக மாவட்டச் செயலாளா் செல்வராஜ் பெரியாா், அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை

1st Oct 2022 05:12 AM

ADVERTISEMENT

திருப்பூா் திமுக வடக்கு மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினா் க. செல்வராஜ், ரயில் நிலையம் அருகேயுள்ள பெரியாா், அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தினாா்.

திமுகவின் 15 ஆவது உட்கட்சித் தோ்தல் அண்மையில் நடைபெற்றது. இதில், திருப்பூா் வடக்கு மாவட்டச் செயலாளராக தெற்கு சட்டப்பேரவை உறுப்பினா் க. செல்வராஜூம், தெற்கு மாவட்டச் செயலாளராக மாநகராட்சி 4 ஆவது மண்டலத் தலைவா் இல. பத்மநாபனும் நியமிக்கப்பட்டனா்.

இந்த நிலையில், சென்னையில் இருந்து திருப்பூா் திரும்பிய க. செல்வராஜூக்கு அக்கட்சியினா் பட்டாசு வெடித்தும், மாலை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனா். இதையடுத்து, திருப்பூா் ரயில் நிலையம் அருகேயுள்ள பெரியாா், அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து செல்வராஜ் மரியாதை செலுத்தினாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT